ஒவ்வொரு ஆண்டும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் கூட்டரசு நிதியிலிருந்து மருத்துவமனைகள், தீயணைப்புத் துறைகள், பள்ளிகள், சாலைகள் மற்றும் பிற வளங்களுக்காக கோடி க்கணக்கான டாலர்கள் செலவிடப்படுகின்றன.
காங்கிரஸில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் தீர்மானிக்கின்றன, மேலும் அவை வாக்களிக்கும் மாவட்டங்களுக்கு எல்லைகளை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது அமெரிக்க அரசியலமைப்புக்குக்கூட தேவைப்படுகிறது: சட்டக்கூறு 1, பிரிவு 2, அமெரிக்கா தனது மக்கள்தொகையின் எண்ணிக்கையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது. முதல் கணக்கெடுப்பு 1790-இல் நிகழ்ந்தது.
நீங்கள் அளிக்கும் தகவல்களைப் பாதுகாக்கவும், கண்டிப்பாக இரகசியமாக வைத்திருக்கவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியகமானது சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படுகிறது. உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை ஒவ்வொரு பணியாளரும் உண்மையில், தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பதாக சத்தியம் செய்திருக்கிறார்கள்.
யு.எஸ். கோட் தலைப்பு 13-இன் கீழ், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியகமானது உங்களைப் பற்றியும், உங்களுடைய வீடு அல்லது வணிகம் குறித்த, அடையாளம் காணக்கூடிய எந்த விதமான தகவலையும் சட்ட அமலாக்க முகமைகளுக்குக் கூட வெளியிட முடியாது. உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதையும், நீங்கள் அளித்த பதில்களை எந்தவொரு அரசாங்க நிறுவனமோ அல்லது நீதிமன்றமோ உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது என்பதையும் சட்டம் உறுதி செய்கிறது.
இது 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின ஒருபொதுவான பகுதியாகும். உங்களுடைய பகுதியில் வேறு சில காரணங்களுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாளர்களை நீங்கள் காணலாம்:
2020-ஆம் ஆண்டு மே மாதத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்பவர்கள் 2020 கணக்கெடுப்புக்குத் தகவல்களை வழங்காத வீடுகளுக்கு நேரடியாக வருகை தரத் தொடங்குவார்கள்.
முகநூல், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் வாயிலாக உங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பின்தொடர்பவர்களுடன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த செய்திகளையும் தகவல்களையும் பகிர்வதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்.
நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், கொள்கைகளை வகுப்பவர்கள் மற்றும் தனிநபர்கள் 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்பதின்முக்கியத்துவம் குறித்து செய்தியைப் பரப்புகிறார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியகமானது கணக்கெடுப்பில் சமுதாயங்களை ஈடுபடுத்த உதவும் வகையில் 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றிய கல்வி ஆதாரங்களை வழங்குகிறது.